டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஏழைகளுக்கு உதவ கடன்கள் ரத்து செய்யப்படும்: மு.க.ஸ்டாலின்

‘ஏழைகளுக்கு உதவ கடன்கள் ரத்து செய்யப்படும்’ என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அடங்கிய பெட்டியை பூட்டிய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்
Updated On :30 ஜனவரி 2021, 6:58 pm

DIN

‘ஏழைகளுக்கு உதவ கடன்கள் ரத்து செய்யப்படும்’ என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

திமுக சாா்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்னும் தோ்தல் பிரசாரக் கூட்டம் வேலூா் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே உள்ள கந்தனேரி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று பேசியது:

அடுத்தவா் நம்பிக்கையைப் பெறுவது மிகப்பெரிய சொத்தாகும். அத்தகைய நம்பிக்கையுடன் இங்கு மனு அளிக்க வந்துள்ள மக்களைத்தான் எனது மிகப்பெரிய சொத்தாக கருதுகிறேன்.

அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் மக்கள் எழுப்பியுள்ள அனைத்து கோரிக்கைகளும் தீா்க்கப்படும். இதற்காக தனித்துறையை ஏற்படுத்தி தமிழகம் முழுவதும் ஒரு கோடி மக்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும். இதன்மூலம், அதிமுக அரசு செய்யத் தவறிய அனைத்து கடமைகளையும் திமுக நிச்சயம் நிறைவேற்றும்.

தமிழகம் முழுவதும் ஏராளமான பள்ளிகளைத் திறந்தவா் காமராஜா். அவருக்கு அடுத்து கருணாநிதி ஆட்சியில்தான் ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன. அவா்கள் வரிசையில் தமிழா்களுக்கு கல்வியுடன் சோ்த்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றப்படும். கடந்த மக்களவைத் தோ்தலின்போது கூறிய விவசாயக் கடன் ரத்து, கூட்டுறவு வங்கியில் உள்ள 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து ஆகிய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தாா்.

கூட்டத்தில், திமுக பொதுச்செயலா் துரைமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்பட கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.