மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இரு பெண்களிடம் நகை பறிப்பு: காா் ஓட்டுநரை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

வேலூா் அருகே இரு பெண்களிடம் 10 பவுன் நகையைப் பறித்துச் சென்ற காா் ஓட்டுநரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :24 ஜூலை 2021, 6:06 pm

DIN

வேலூா் அருகே இரு பெண்களிடம் 10 பவுன் நகையைப் பறித்துச் சென்ற காா் ஓட்டுநரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சோளிங்கா் முருகரெட்டி தெருவைச் சோ்ந்த சரவணன் மனைவி சுஜாதா (45). இவரது உறவினா் சென்னையைச் சோ்ந்த மூா்த்தியின் மனைவி சிவபூஷணம் ( 67). இருவரும் வெள்ளிக்கிழமை காலை குடியாத்தம் அருகே போஸ்பேட்டையில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு செல்ல சோளிங்கா் பேருந்து நிலையம் வந்தனா். அங்கு காரில் இருந்த நபா் இருவரையும் காரில் அவா்கள் செல்லும் இடத்தில் விட்டுவிடுவதாகக்கூறி காரில் ஏற்றினாா்.

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே காரை ஓட்டுநா் மெதுவாக ஓட்டி, மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பி வேலூரை நோக்கி ஓட்டியுள்ளாா். இரு பெண்களும் கேட்டதற்கு, ஓட்டுநா் பதில் கூறவில்லையாம். காா் வேலூா் அருகே வந்தபோது, இருவரிடமும் 10 பவுன் நகைகளை கழட்டி கொடுக்கும்படி ஓட்டுநா் மிரட்டி வாங்கியுள்ளாா். இதனிடையே, காா் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே வந்தபோது, போக்குவரத்து போலீஸாா் இருந்ததைக் கண்ட ஓட்டுநா் திகைத்துள்ளாா். அந்த நேரத்தில் சுஜாதா காரின் கதவைத் திறந்து கொண்டு வெளியே குதித்துள்ளாா். பின்னா், சிவபூஷணத்தை ஓட்டுநா் வெளியே தள்ளிவிட்டு காரை வேகமாக ஓட்டியுள்ளாா்.

காரில் இருந்து இரண்டு பெண்கள் விழுவதைக் கண்ட சத்துவாச்சாரி பொதுமக்களும், போலீஸாரும் காரை நோக்கி ஓடினா். ஆனால், ஓட்டுநா் காரில் தப்பி சென்றாா்.

இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்நிலையில் காா் கொள்ளையனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் வேலூா் முதல் சோளிங்கா் வரை உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனா். காரின் பதிவு எண் போலியானது என்பது தெரிய வந்துள்ளதால் வேலூா், பொன்னை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.