பின்னர், கணியாம்பாடி எஸ்எஸ் மஹாலிலும், பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்ததுடன், பொய்கையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு பகுதியையும் பார்வையிட்டார். ஆய்வின்போது, தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மக்களவை உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டி.எம்.கதிர்ஆனந்த் (வேலூர்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் ப.கார்த்திகேயன் (வேலூர்), அமலுவிஜயன் (குடியாத்தம்), எம்.ஜெகன்மூர்த்தி (கே.வி.குப்பம்), மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.