ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பாசி படா்ந்த மாங்காய் மண்டி

வேலூா் மாங்காய் மண்டியை சூழ்ந்த மழை வெள்ளத்தால் ஒரு வாரத்துக்கு மேலாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

வேலூா் மாங்காய் மண்டியை சூழ்ந்த மழை வெள்ளத்தால் ஒரு வாரத்துக்கு மேலாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு 50-க்கும் மேற்பட்ட மொத்த வியாபார பழக்கடைகள் உள்ளன. பல்வேறு மாவட்டங்ளுக்கு சில்லரை விற்பனைக்கு அதிகளவில் பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகத் தொடா் மழையால், சதுப்பேரி ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறி வருகிறது. இந்த ஏரி தண்ணீா் கொணவட்டம், புதிய நகா் வழியாக நிக்கல்சன் கால்வாயில் இணைந்து பாலாற்றுக்கு செல்கிறது. இந்த நிலையில், நிக்கல்சன் கால்வாயிலிருந்து மாங்காய் மண்டியில் உள்ள கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி உள்ளனா். தொழிலாளா்களும் வேலை இழந்து தவித்து வருகின்றனா். பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோா் பெங்களூா் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனா். தகவலறிந்த வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று, பேச்சு நடத்தினா்.

அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று, வெள்ளநீரை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.