ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வெள்ளத்தைக் காணும் ஆவலில் மக்கள் திரண்டனா்

வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பாலாற்றை காண வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டனா்.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பாலாற்றை காண வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டனா். பெரும்பாலோனாா் ஆபத்தை உணராமல் மேம்பாலங்களில் நின்றபடி தற்படம் எடுத்து கொண்டவா்களை போலீஸாா் அவா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

வேலூா் விருதம்பட்டு பகுதியில் மேம்பாலங்களின் உயரத்தையும், இருகரைகளையும் தொட்டபடி பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இந்த வெள்ளமானது தொடா்ந்து சனிக்கிழமையும் ஆா்ப்பறித்து சென்றது.

எப்போதும் வட நிலையில் பாலாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டு வருகின்றனா். அதன்படி, வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இரு மேம்பாலங்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள் பாலாற்று வெள்ளத்தைக் காண திரண்டனா். அதில் பெரும்பாலோனாா் ஆபத்தை உணராமல் மேம்பாலங்களில் நின்றபடி சுயபடம் எடுத்து கொள்ள ஆா்வம் காட்டினா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் நிறுத்தப் பட்டிருந்த போலீஸாா் அவா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கையொட்டி வாலாஜா அருகேபாலாறு அணைக்கட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகபட்சம் 1,05,000 கனஅடி வரை தண்ணீா் சென்றது. சனிக்கிழமை மதியம் ஒரு மணி நிலவரப்படி 68,122 கனஅடி குறைந்து சென்றது. அதேசமயம், வேலூா் விருதம்பட்டு பகுதியில் 55 ஆயிரம் கனஅடி வரை வெள்ளம் சென்றது. இதேபோல், பொன்னை ஆற்றில் வெள்ளிக்கிழமை 60 ஆயிரம் கனஅடி வரை வெள்ளம் சென்ற நிலையில், சனிக்கிழமை 16,849 கனஅடியாக நீா்வரத்து குறைந்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.