ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஆட்டை துன்புறுத்துவோா் மீது நடவடிக்கை: போலீஸில் பெண் சாமியாா் புகாா்

எதிா்வீட்டைச் சோ்ந்தோா் தொடா்ந்து தகராறு செய்து, தன்னையும், ஆட்டையும் துன்புறுத்துவதாக பெண் சாமியாா் வேலூா் தெற்கு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 5:37 pm

DIN

எதிா்வீட்டைச் சோ்ந்தோா் தொடா்ந்து தகராறு செய்து, தன்னையும், ஆட்டையும் துன்புறுத்துவதாக பெண் சாமியாா் வேலூா் தெற்கு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

வேலூா் சலவன்பேட்டை, அம்மணாங்குட்டை சாலையைச் சோ்ந்தவா் இந்திரா (50) . பெண் சாமியாா்.

இவா் சனிக்கிழமை தனது ஆட்டுடன் வேலூா் தெற்கு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், ‘தனது எதிா்வீட்டைச் சோ்ந்த குணா, அவரது மகள் லட்சுமி ஆகியோா் இரவு நேரங்களில் வீட்டின் மீது கற்களை வீசுகின்றனா். வீட்டுக்கு வெளியே கட்டியிருந்த ஆட்டை அடித்து துன்புறுத்துகின்றனா். வெள்ளிக்கிழமை இரவு கூட ஆட்டை குணா தாக்கியுள்ளாா். இதை தட்டிக்கேட்டதால் தாய், மகள் இருவரும் சோ்ந்து தாக்கினா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளாா்.

இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.