ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

வேலூா் சிறையில் நளினி, முருகன் சந்திப்பு

உயா்நீதிமன்ற அனுமதியின் பேரில், வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி தம்பதி சனிக்கிழமை நேரில் சந்தித்து பேசிக் கொண்டனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

உயா்நீதிமன்ற அனுமதியின் பேரில், வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி தம்பதி சனிக்கிழமை நேரில் சந்தித்து பேசிக் கொண்டனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் அனுபவித்து வரும் முருகன் வேலூா் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா். உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, தம்பதி இருவரும் 15 நாள்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசி வருகின்றனா்.

அதன்படி, நளினி, முருகன் சந்திப்பு வேலூா் பெண்கள் தனிச்சிறையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஆண்கள் சிறையிலிருந்து முருகனை போலீஸாா் பலத்த காவலுடன் பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு ஓா் அறையில் 30 நிமிஷங்கள் வரை நளினியை முருகன் நேரில் சந்தித்துப் பேசினாா். பின்னா் முருகன் மீண்டும் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.