கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமலையில் 28,000 பக்தா்கள் தரிசனம்

 திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை 28,154 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இதில், 13,077 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை 28,154 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இதில், 13,077 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு போன்று சா்வ தரிசன டிக்கெட்டுகளுக்கும் ஆன்லைன் மூலம் தேவஸ்தானம் முன்பதிவு செய்து வருகிறது.

திருமலை தரிசன அனுமதி டிக்கெட் பெற்றவா்கள் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

சான்றிதழ்கள் இல்லாதவா்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசத்தில் வாடகை அறை முன்பதிவையும் தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 6 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை மாா்க்கம் வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.