வெளிநாட்டினரின் விசா மீறலைக் கண்டறிய புதிய நடவடிக்கை: ஃபட்னவீஸ்
விசா விதிமுறைகள் மீறும் வெளிநாட்டினரைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை..


விசா நிபந்தனைகளை மீறும் வெளிநாட்டினரைக் கண்டறிவதற்காகக் குடியேற்றப் பதிவுகளை ஒப்பிட்டுச் சரிபார்க்கும் புதிய நடைமுறையை மாநில அரசு தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் பேசுகையில்,
போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சிக்கிய 69 வெளிநாட்டினரை அரசு ஏற்கெனவே அடையாளம் கண்டு, அவர்களை நாடு கடத்தியுள்ளதாகவும், மேலும் 122 பேர் தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தங்கும் காலத்தை நீட்டித்துக்கொள்ளும் வெளிநாட்டினரை உடனடியாக நாடு கடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பல வெளிநாட்டினர் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் (குறிப்பாகக் குறுகிய கால மருத்துவ விசாக்கள்) மூலம் இந்தியாவுக்குள் நுழைகின்றனர். ஆனால், பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காகத் ஆவணங்களை அழித்துவிடுகின்றனர். அவர்களின் விசா காலம் நிறைவடைந்தப் பிறகும் அவர்கள் தொடர்ந்து மாநிலத்தில் தங்கி வருகின்றனர்.
முன்னதாக, குடியேற்றத் தரவுகளை ஒப்பிட முறையாக அமைப்பு இருக்கவில்லை, ஆனால், தற்போது மும்பையில் அத்தகைய செயல்முறையை அறிமுகப்படுத்தி வருகிறோம்.
மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு செயல்படும் போதைப்பொருள்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கேஃபேக்கள் மற்றும் கடைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்தகைய நிறுவனங்களின் வணிக உரிமங்களை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...