ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஈரான் புதிய உச்ச தலைவர் உயிருடன் இருந்தால் சரணடைய வேண்டும்: டிரம்ப்

மொஜ்தபா கமேனி உயிருடன் இருந்தால் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது குறித்து...

News image

டிரம்ப் | மோஜ்தபா கமேனி

சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 9:09 am

இணையதளச் செய்திப் பிரிவு

வாஷிங்டன்: ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி உயிருடன் இல்லை என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை அவர் உயிருடன் இருந்தால் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதலில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்த டிரம்ப், "ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இல்லை என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது" என்று கூறினார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு டிரம்ப் சனிக்கிழமை அளித்த பேட்டியில், "ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறது; ஆனால் வழங்கப்பட்ட விதிமுறைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால், நான் அந்த ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள விரும்பவில்லை," என்று அவர் கூறினார். மேலும், எதிர்காலத்தில் எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் "மிகவும் உறுதியானதாக" இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அந்த ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள் குறித்து கேட்டபோது, "அந்த நிபந்தனைகள் குறித்து நான் அதை உங்களிடம் கூற விரும்பவில்லை." இருப்பினும், ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை முழுமையாக கைவிடுவது அந்த ஒப்பந்தத்தின் முதன்மையான அங்கமாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ள ஒரு பதிவில், எண்ணெய் டேங்கர்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு உள்ளிட்ட நாடுகள் அந்தப் பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்பலாம் என்று டிரம்ப் பரிந்துரைத்திருந்தார்.

கார்க் தீவில் தாக்குதல்

ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி காா்க் தீவின் வழியாகவே நடைபெறுகிறது. ஈரான் கடற்கரையிலிருந்து 16 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த தீவில் உள்ள ‘எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தவிா்த்துவிட்டு, கடல்சாா் கண்ணிவெடி மற்றும் ஏவுகணை சேமிப்பு வசதிகள் உள்பட காா்க் தீவில் உள்ள 90-க்கும் மேற்பட்ட ஈரான் ராணுவ இலக்குகளை அமெரிக்க படைகள் துல்லியமாக தாக்கின’ என்று டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தொடா்ந்து இடையூறு விளைவித்தால், அடுத்தகட்டமாக எண்ணெய் உள்கட்டமைப்புகளும் குறிவைக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தாா்.

மேலும், சமீபத்தில் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா என்பதே எனக்குத் தெரியவில்லை. இதுவரை, அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பிய டிரம்ப், அவர் உயிருடன் இல்லை என்று எனக்குத் தகவல்கள் வருகின்றன. ஒருவேளை அவர் உயிருடன் இருந்தால், அவர் தனது நாட்டிற்காக மிகவும் புத்திசாலித்தனமான ஒன்றைச் செய்ய வேண்டும்; அதுதான் 'சரணடைவது' என்று கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதலால் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதால், உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கியமான பாதையான ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க பல நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், ஹோர்முஸ் நீரிணையில் போர்க்கப்பல்களை நிலைநிறுத்த அழைப்பு விடுத்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

Summary

Trump also questioned whether Iran's new supreme leader, Mojtaba Khamenei, is still alive after he did not appear on camera following his appointment earlier this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.