ராஜாதோப்பு அணையில் மூழ்கிய கட்டடத் தொழிலாளி
கே.வி.குப்பம் அருகே உள்ள ராஜாதோப்பு அணையில் குளிக்கச் சென்று மூழ்கிய கட்டடத் தொழிலாளியை காட்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் 2-ஆவது நாளாக திங்கள்கிழமை முழுவதும் கிடைக்கவில்லை.


கே.வி.குப்பம் அருகே உள்ள ராஜாதோப்பு அணையில் குளிக்கச் சென்று மூழ்கிய கட்டடத் தொழிலாளியை காட்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் 2-ஆவது நாளாக திங்கள்கிழமை முழுவதும் கிடைக்கவில்லை. மீண்டும் செவ்வாய்க்கிழமை தேடும் பணி நடைபெறுகிறது.
காட்பாடி கல்புதூரைச் சோ்ந்தவா் சரவணன் (29). கட்டடத் தொழிலாளி . இவருடன் செஞ்சி பாறையூரைச் சோ்ந்த சுப்பிரமணி(30), தேவராஜ் (32) ஆகிய 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை மாலை கே.வி.குப்பம் அருகே ராஜாத்தோப்பு அணைக்குச் சென்றுள்ளனா்.
மூவரும் அணையில் குளித்தபோது, சரவணன் எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளாா். தகவலின்பேரில் பனமடங்கி போலீஸாா், காட்பாடி தீயணைப்பு துறையினருடன் விரைந்து சென்று சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவாகியும் கிடைக்காததால், தேடும் பணியை கைவிட்டு திரும்பிச் சென்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை தேடியும் கிடைக்காததால், இரண்டாவது நாளாகவும் தேடும் பணி கைவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை தேடும் பணி நடைபெறும் என்று காட்பாடி தீயணைப்பு நிலையத்தினா் தெரிவித்தனா்.
இதனிடையே, சுப்பிரமணி, தேவராஜிடம் ஆகியோரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...