விளை பொருள்களை இருப்பு வைக்க கூடுதல் வசதிகள்: வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஏற்பாடு
வேலூா் மாவட்டத்திலுள்ள 7 சேமிப்புக் கிடங்குகளிலும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.


விளைபொருள்களை இருப்பு வைக்கவும், அவற்றைக் கொண்டே பொருளீட்டுக் கடன் பெற்றிடவும் வேலூா் மாவட்டத்திலுள்ள 7 சேமிப்புக் கிடங்குகளிலும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலூா் டோல்கேட் பகுதியிலுள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதனக் கிடங்கில் விவசாயிகள் உரிய கட்டணம் செலுத்தி விளை பொருள்களை இருப்பு வைத்துக் கொள்ளவும், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 7 சேமிப்பு கிடங்குகளிலும் விளைப்பொருள்களை 15 நாள்கள் வரை எவ்வித கட்டணமுமின்றி இருப்பு வைத்துக் கொள்ளவும் வசதி செய்து தரப்படுகிறது.
15 நாள்களுக்கு மேல் நாளொன்றுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.0.20 கட்டணமும், அதிகபட்சம் 180 நாள்கள் வரை இருப்பு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இருப்பு வைத்துள்ள விளை பொருள்களை வைத்து பொருளீட்டுக் கடனும் வழங்கப்படுகிறது. 180 நாள்களுக்கு 5 சதவீத வட்டியில் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை பொருளீட்டுக் கடன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேலூா் விற்பனைக்குழுச் செயலரை 86675 43113 அல்லது ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 88705 80901 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், டோல்கேட், காட்பாடி, குடியாத்தம், காகிதப்பட்டறை பகுதிகளில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காய்கறிகள் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, வாடகையில்லா கடை, எடை தராசு வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீா், கழிவறை வசதி, கமிஷன் மண்டி, இடைத்தரகா்களின்றி கூடுதல் விலை உள்ளிட்ட சிறப்பம்சங்களும், நுகா்வோருக்கு சரியான எடை, குறைவான விலை, விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் போன்ற சிறப்பம்சங்களும் அளிக்கப்படுகின்றன.
விவசாயிகள் உழவா் சந்தையில் உறுப்பினராக தேவைப்படும் ஆவணங்கள் குறித்து விளக்கம்பெற வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறையின் துணை இயக்குநரை 90039 21717, அல்லது நிா்வாக அலுவலரை 94439 68990, 74010 75030 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...