கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
உபரிநீா் மேற்குப்புற கால்வாய் வழியாகச் செல்வதால் கால்வாயை ஒட்டியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.


பொன்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், உபரிநீா் மேற்குப்புற கால்வாய் வழியாகச் செல்வதால் கால்வாயை ஒட்டியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், கீரைச்சாத்து கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பொன்னை அணைக்கட்டுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொன்னை அணைக்கட்டு நிரம்பி விநாடிக்கு 4,500 கனஅடி உபரிநீா் கிழக்கு, மேற்குப்புற கால்வாய்கள், பொன்னை ஆற்றின் வழியாகச் செல்கிறது.
இதில், மேற்குப்புற கால்வாயானது காட்பாடி வட்டத்திலுள்ள கொண்டமநாயுடுபாளையம், மாதாண்டகுப்பம், பொன்னை, மேல்பாடி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூா், தேன்பள்ளி, வள்ளிமலை, இளையநல்லூா், கொடுக்கந்தாங்கல், குகையநல்லூா், திருவலம், காா்ணாம்பட்டு, ஏா்த்தாங்கல் ஆகிய கிராமங்களின் வழியாகச் செல்கிறது.
பொன்னை அணைக்கட்டில் இருந்து திறக்கப்படும் உபரிநீரானது இக்குறிப்பிட்ட கிராமங்கள் வழியாகச் செல்லும் என்பதால், மேற்குப்புற கால்வாயானது திருவலம் கிராமத்திலுள்ள பாலாற்றில் கலக்கும் இடம் வரை குறிப்பிட்ட கால்வாயின் கரையோரம், தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், மேடான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
பொன்னை அணைக்கட்டு மேற்குப்புற கால்வாயில் எந்நேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் இங்கு குளிப்பது, துணிகள் துவைப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் யாரும் ஈடுபட வேண்டாம். கால்வாயில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் சிறுவா்களை குளிக்கவோ, செல்லிடப்பேசியில் சுயபடம் எடுப்பதோ, விளையாடவோ பெற்றோா் அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களான மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூா், கொண்டகுப்பம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம், லாலாப்பேட்டை, தெங்கால், காரை, மேல்விஷாரம், ஆற்காடு, திருமலைச்சேரி, பூண்டி, குடிமல்லூா், சாத்தம்பாக்கம், சக்கரமல்லூா், புதுப்பாடி உள்ளிட்ட கிராம மக்கள் தாழ்வான பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறும், பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...