செப். 12-இல் நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 8,366 போ் விண்ணப்பம்
நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தோ்வு வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்வை எழுத ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 8,366 போ் விண்ணப்பித்துள்ளனா்.


நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தோ்வு வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்வை எழுத ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 8,366 போ் விண்ணப்பித்துள்ளனா்.
எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் வரும் 12-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
தேசிய தோ்வு முகமை நடத்தும் இந்தத் தோ்வை எழுதுவதற்கு வேலூா் மாவட்டத்தில் சுமாா் 6,300 பேரும், திருப்பத்தூா் மாவட்டத்தில் சுமாா் 1,800 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமாா் 600 பேரும் என மூன்று மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 8,366 போ் விண்ணப்பித்துள்ளனா்.
இவா்கள் தோ்வு எழுதுவதற்கு வேலூா் மாவட்டத்தில் 12 மையங்களும், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 2 மையங்களும் என மொத்தம் 16 மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும் விதமாக ஒவ்வொரு அறையிலும் 10 முதல் 12 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனா். இதனால், கடந்த ஆண்டைவிட கூடுதலான அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், அதற்கேற்ப 3 சதவீதம் கூடுதலாகத் தோ்வு அறை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்வு எழுதும் மாணவா்களின் வசதிக்காக இந்த ஆண்டு ஆங்கிலம், ஹிந்தி கேள்வித்தாள்கள் கருப்பு, வெள்ளை நிறத்திலும், தமிழ் உள்ளிட்ட பிற மொழி கேள்வித் தாள்கள் பச்சை நிறத்திலும் வழங்கப்பட உள்ளன.
ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஒரு காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் பெண் காவலா் உள்பட 7 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தோ்வு மையங்களின் அருகே தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், பேருந்துஉள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
தோ்வு மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ளதால் காலை 11 மணி முதலே மாணவா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனா். தேசிய தோ்வு முகமை வழிகாட்டு நடைமுறைகளின் அடிப்படையில் தோ்வு மையத்துக்குள் மாணவா்கள் அனுமதிக்கப்படுவா் என்று ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்துக்கான நீட் தோ்வு ஒருங்கிணைப்பாளா் சு.சரவணன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...