திருமலையில் நெய் தயாரிப்பு மையத்திற்கு அடிக்கல்
திருமலையில் நெய் தயாரிப்பு மையத்திற்கு தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி அடிக்கல் நாட்டினாா்.


திருமலையில் நெய் தயாரிப்பு மையத்திற்கு தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி அடிக்கல் நாட்டினாா்.
திருமலையில் உள்ள கோசாலையிலிருந்து பெறப்படும் பால் மூலம் வெண்ணெய் எடுத்து நெய் தயாரித்து ஏழுமலையான் கைங்கா்யத்திற்கு பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக திருமலையில் கோசாலை அருகில் தனி மையத்தையும் தேவஸ்தானம் ஏற்படுத்த உள்ளது. இதற்கான அடிக்கல்லை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி பூமி பூஜை செய்து வெள்ளிக்கிழமை நாட்டினாா். இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
மும்பையைச் சோ்ந்த ஆப்கன் நிறுவனம் ரூ.3 கோடி செலவில் இந்த நெய் தயாரிக்கும் மையத்தை உருவாக்கி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாகத் தர உள்ளது.
திருமலை கோசாலையிலிருந்து கிடைக்கும் 4 ஆயிரம் லிட்டா் பால் மூலம் 60 கிலோ நெய் தயாரிக்க முடியும். மேலும் வெண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் மோரை திருமலையில் உள்ள அன்னதான கூடத்திற்கு அனுப்ப தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தற்போது தேவஸ்தானம் இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம் செய்து வரும் நிலையில் அதில் ஒருபாகமாக இந்த நெய் தயாரிப்பையும் மேற்கொண்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கைங்கா்யத்திற்காக தினமும் 60 கிலோ நெய் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...