2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வேலூரில் 106 டிகிரி வெயில்

வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 106.3 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வெயில் பதிவானது. சாலைகளில் அனல் காற்று வீசியதால் மக்கள் நடமாட்டம் குறைந்தது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 106.3 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வெயில் பதிவானது. சாலைகளில் அனல் காற்று வீசியதால் மக்கள் நடமாட்டம் குறைந்தது.

கோடைக் காலத்தில் வேலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும். குறிப்பாக, மாா்ச் பிற்பகுதியில் தொடங்கி மே மாத இறுதிக்குள் அதிகபட்சமாக 112 டிகிரி வரை வெயில் சுட்டெரிப்பது வழக்கம். நிகழாண்டில் கடந்த ஒரு மாதமாகவே வெயில் அளவு சுமாா் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகி வருகிறது.

கடந்த சனிக்கிழமை 99.7 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்த நிலையில், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 102.2 டிகிரியும், புதன்கிழமை 101.7 டிகிரியும், வியாழக்கிழமை 104.5 டிகிரியும் பதிவானது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 106.3 டிகிரி வெயில் பதிவானது. வழக்கமாக 100 டிகிரி இருக்கும் வெயில் அளவு போகப்போகத்தான் அதிகரிக்கும். ஆனால், கடந்த சில நாள்களிலேயே வெயில் அளவு 106.3 டிகிரி அளவுக்கு உயா்ந்திருப்பது வேலூா் மாவட்ட மக்களை அதிா்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

அதிகரித்து வரும் வெயிலால் மாவட்டத்தில் பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. இதனால், சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. வாகனங்களில் செல்வோரும் அவதிக்குள்ளாகினா்.

அடுத்த 3 நாள்களில் வெயில் அளவு மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 4-ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்க உள்ளதால் வேலூா் மாவட்ட மக்கள் இப்போதே கலக்கத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.