சட்டம்- ஒழுங்கு கைமீறி போய்விட்டது என்பதைத்தான் முதலமைச்சர் "ஓவர் ஓவர்: என கையசைப்பின் மூலம் தெரிவித்தாரோ…? என பாமக நிறுவனர் ச. ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு வந்த கும்பல், இருசக்கர வாகனத்தில் சென்ற ஜான் என்ற மாற்றுத்திறனாளியையும், வட இந்தியத் தொழிலாளியையும் அரிவாளால் வெட்டி கொன்ற அக்கும்பல், அவர்களின் இருசக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு தேனீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியது. இதில் 7 பேர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜூ என்பவரிடம் கடந்த 3-ஆம் தேதி டாஸ்மாக் கடைக்கு சென்ற ஒரு கும்பல் தகராறு செய்து அரிவாளால் அவரை வெட்டியது.
தப்பியோடிய அவரை விடாமல் விரட்டிச் சென்ற கும்பல், வழியில் தென்பட்ட ஆண், பெண்களை அரிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலில் ராஜூ தவிர, தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 5 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே கோவை, சூலூரில் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றிய இருவரை பிடிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்று உடன் இருந்த காவலர்களையும் தாக்க முயன்றதால் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்து அவருடன் மேலும் 4 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் காங்கிரசுடன் கூட்டணி ஒப்பந்தத்தை முடித்ததை ’ஓவர்’ என கையசைத்ததாக அவர் விளக்கம் அளித்தாலும், அதை வைத்து ‘ஆல் பினிஷ்’ என நான் சொன்னது போல வைரலாக்கிவிட்டனர் என்றார். இந்த மூன்று நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளதால், ‘ஆல் பினிஷ்’ என சட்டம்- ஒழுங்கு கைமீறி போய்விட்டது என்றுதான் எண்ணி வைரலாக்கப்பட்டதோ என்றே எண்ணவைக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.
Summary
Did the Chief Minister use the gesture of "over and over" to indicate that law and order had gone out of control? - Ramadoss
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகத்தை மதித்து அமைதிப் புரட்சி - அன்புமணி
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


