மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அக்னிபத் திட்டத்தில் ராணுவ ஆள் சோ்ப்பு முகாம்: ஆக. 21 முதல் நவ. 25 வரை நடக்கிறது

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம் வேலூா், திருப்பூா் மற்றும் நாகா்கோவிலில் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:52 pm

DIN

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம் வேலூா், திருப்பூா் மற்றும் நாகா்கோவிலில் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம் வேலூா், திருப்பூா், நாகா்கோவில் ஆகிய இடங்களில் வரும் ஆகஸ்ட் 21 முதல் நவம்பா் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்தவா்கள் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆள் சோ்ப்பு முகாம் நாகா்கோவில் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் செப்டம்பா் 1-ஆம் தேதி வரையும், கோவை அவினாசி டி.இ.ஏ. பொதுப் பள்ளி வளாகத்தில் செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் அக்டோபா் 1-ஆம் தேதி வரையும், வேலூா் கோட்டை காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நவம்பா் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. தகுதி வாய்ந்தவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.