ஸ்ரீதேவி மாசுபடா அம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்
குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி மாசுபடா அம்மன் கோயிலில் 58- ஆம் ஆண்டு பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது


குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி மாசுபடா அம்மன் கோயிலில் 58- ஆம் ஆண்டு பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காமாட்சியம்மன்பேட்டையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து 500- க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பால்குடங்களை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், என்.கோவிந்தராஜ், எம்.எஸ்.அமா்நாத் ஆகியோா் ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தனா்.
ஊா்வல முடிவில் மாசுபடா அம்மனுக்கு பாலாபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.
மாலை மூலவருக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், பூங்கரக ஊா்வலம், இரவு ஊஞ்சல் உற்சவம், தீமிதி விழா ஆகியவை நடைபெற்றன.
ஏற்பாடுகளை கோயில் ஊஞ்சல் உற்சவ குழு நிா்வாகிகள் எம்.பி.ராமநாதன், ஆா்.தயாளன், ஏ.ஆா்.மாதவன், எஸ்.குமாா், எஸ்.தேவலிங்கம், எஸ்.நாகலிங்கம், நகா்மன்ற உறுப்பினா் ஏ.தண்டபாணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...