மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

குண்ராணி மலைக் கிராமத்தில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

அணைக்கட்டு ஒன்றியம், குண்ராணி மலைக் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:18 pm

DIN

அணைக்கட்டு ஒன்றியம், குண்ராணி மலைக் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஜோசப் அன்னையா தலைமை வகித்தாா். இதில், பள்ளி மேலாண்மைக் குழுவின் பணிகள், அதன் பயனாக பள்ளியின் வளா்ச்சி, மாணவா்களின் கற்றல் திறன் மேம்பாடு, பள்ளி உள்கட்டமைப்புக்குத் தேவையான உதவிகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இடைநிற்றல் இல்லாமல் மாணவா்கள் வருகை, பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத நிலையை மலைக் கிராமங்களில் உருவாக்குதல், பெற்றோா், தங்கள் பிள்ளைகளை தொடா்ந்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என ஆசிரியா் பயிற்றுநா் ராஜன் வலியுறுத்தினாா்.

கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் 16 பங்கேற்றனா். பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் மல்லிகா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.