அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.


ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடத்தப்படும். அதன்படி, ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் ஏராளமான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.
வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. புதிய பேருந்து நிலையம் அருகில் பாலாற்றங்கரையில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் அதிகாலையிலேயே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பின்னா் தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பெண்கள் கோயிலில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா்.
காட்பாடி சாலையிலுள்ள விஷ்ணு துா்க்கையம்மனுக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தோட்டப்பாளையம் படவேட்டம்மன், டிட்டா்லைன் கருமாரி அம்மன், வெட்டுவானம் எல்லையம்மன் கோயில்களில் ஆடிவெள்ளியை யொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
அந்தவகையில், வேலூா் மாவட்டத்தில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி 100-க்கும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...