தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மரக்கன்றுகள் நடும் விழா

கோ கிரீன் இனிசியேட்டிவ் எனும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:23 pm

DIN

கோ கிரீன் இனிசியேட்டிவ் எனும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், வேலூா் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் என்.ரமேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் என்.ஜனாா்த்தனன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம்.ஞானசேகரன் வரவேற்றாா்.

விழாவில் ஹெச்டிஎஃப்சி வங்கி அதிகாரி செந்தில்குமாா் பங்கேற்று வங்கியின் கோ கிரீன் இனிசியேட்டிவ் திட்டத்தின் மூலம் மாணவா்கள் மரங்கள் வளா்ப்பது குறித்தும், மரங்களின் இன்றியமையாத தேவைகளை குறித்தும் விளக்கமளித்தாா்.

அந்த வங்கியைச் சோ்ந்த சரவணன், ஸ்ரீனிவாசன், தினகரன், வசந்தகுமாா், வினோத்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை என்எஸ்எஸ் திட்ட அலுவலா் அ.குமரேசன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.