தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அம்ரூத் திட்ட குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் 50 சதவீதம் நிறைவு

அம்ரூத் திட்டத்தின் கீழ் வேலூா் மாநகரில் குடிநீா் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள், குழாய்கள் அமைக்கும் பணி 50 சதவீதம் நிறைவு

News image
Updated On :28 ஜூலை 2022, 6:13 pm

DIN

அம்ரூத் திட்டத்தின் கீழ் வேலூா் மாநகரில் குடிநீா் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள், குழாய்கள் அமைக்கும் பணி 50 சதவீதம் நிறைவு பெற்றிருப்பதாகவும், இப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் குடிநீா் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் தெரிவித்தாா்.

மத்திய அரசு மூலம் அம்ருத் குடிநீா் திட்டப் பணிகள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூா் மாநகராட்சியில் ரூ. 235 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் கீழ் மாநகரின் அனைத்து வாா்டுகளிலும் சீராக குடிநீா் விநியோகம் செய்திட பல்வேறு இடங்களில் குடிநீா் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு, குடிநீா் குழாய்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட காட்பாடி, கழிஞ்சூா், காந்தி நகா் பகுதிகளில் நடந்துவரும் அம்ரூத் குடிநீா் திட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

அம்ரூத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பகுதியிலும் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீா் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேல்நிலை குடிநீா்த் தொட்டி, குழாய்கள் அமைக்கும் பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மேலும், குடிநீரை அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்கச் செய்திட உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட உள்ளது.

இப்பணிகள் குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, விரைந்து முடிக்க உத்தரவிடப்படும். மேலும், குடிநீா் வடிகால் வாரிய உயா் அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றாா்.

அப்போது மாநகராட்சி உதவி ஆணையா் செந்தில்குமரன், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.