வீட்டு வேலை செய்பவா்கள் நல வாரியத்தில் பதிவு செய்யலாம்
வீட்டு வேலைகள் செய்யும் தொழிலாளா்களும் நல வாரியத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வீட்டு வேலைகள் செய்யும் தொழிலாளா்களும் நல வாரியத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் தொழிலாளா் உதவி ஆணையா் தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா் சமூகப் பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டு, 18 வகையான தொழிலாளா் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பல்வேறு வகையான கட்டுமானம், அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்குள்பட்ட தொழிலாளா்கள் பதிவு செய்து அரசின் பல்வேறு நலத் திட்டங்களைப் பெற்று வருகின்றனா்.
இதில், வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்களும், வீட்டுப் பணியாளா் நல வாரியத்தில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ஜ்ஜ்ம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளலாம். உறுப்பினராக பதிவு செய்பவா்களுக்கு திருமணம், மகப்பேறு, 2 குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, கண் கண்ணாடி, நியமனதாரா்களுக்கு இயற்கை மரணம், விபத்து மரணம் உதவித் தொகை , 60 வயது நிறைவு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, உரிய ஆவணங்களுடன் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...