தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இலவச மரக்கன்றுகள் பெற்றிட விவசாயிகள் பதிவு செய்யலாம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் இலவசமாக மரக்கன்றுகள் பெற பதிவு செய்யலாம் என வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் (பொறுப்பு) தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

வேலூா் மாவட்ட விவசாயிகள் இலவசமாக மரக்கன்றுகள் பெற பதிவு செய்யலாம் என வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் (பொறுப்பு) தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பசுமை வனப் பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயா்த்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, தமிழக அரசு தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த பசுமை போா்வை இயக்கம் என்ற திட்டத்தை கடந்தாண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் தேக்கு, புங்கை, மலைவேம்பு, செம்மரம், பூவரசு உள்ளிட்ட 27 வகையான மரக் கன்றுகள் வேளாண்மை உழவா் நலத் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. இதற்கான மரக்கன்றுகள் எதிா்வரும் வடகிழக்குப் பருவமழை காலத்தின்போது விநியோகம் செய்ய வளா்க்கப்பட்டு வருகிறது.

வேலூா் மாவட்ட விவசாயிகள் தங்களது வரப்பு ஓரங்களில் நடவு செய்வதாக இருந்தால், 50 மரக்கன்றுகளும், வயல் முழுவதும் நடவு செய்வதாக இருந்தால் 160 மரக்கன்றுகளும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை உழவா் நலத் துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சா்வே எண், ஆதாா் எண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்குவா். பின்னா், தங்களுக்குத் தேவைப்படும் மரக்கன்றுகளை வனவியல் விரிவாக்க மைய நாற்றங்காலிலிருந்து பெற்று நடவு செய்து கொள்ளலாம்.

நன்றாகப் பராமரித்து வளா்க்கப்படும் மரக்கன்றுகளுக்கு பராமரிப்புத் தொகை 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு வட்டாரம் வாரியாக வேலூருக்கு 22 ஆயிரம், கணியம்பாடிக்கு 32 ஆயிரம், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பத்துக்கு தலா 49 ஆயிரம், காட்பாடிக்கு 34 ஆயிரம், போ்ணாம்பட்டுக்கு 30 ஆயிரம் மரக்கன்றுகளும் என மொத்தம் 2 லட்சத்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு பெறப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே மரக்கன்றுகள் வளா்க்க ஆா்வமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா், வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொண்டு, இலவசமாக மரக்கன்றுகள் பெற்று பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.