தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தன்னாா்வலா்கள் முயற்சியால் நவீனமயமாகும் அரசுப் பள்ளி வகுப்பறைகள்!

தன்னாா்வலா்களின் முயற்சியால் வேலூரிலுள்ள மூன்று அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:40 pm

DIN

தன்னாா்வலா்களின் முயற்சியால் வேலூரிலுள்ள மூன்று அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கருகம்பத்தூா் அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் சுமாா் 100 மாணவா்கள் படித்து வருகின்றனா். தலைமையாசிரியா் உள்பட 8 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றுகின்றனா். இந்தப் பள்ளி மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஸ்மாா்ட் வகுப்பறைகளாக மாற்றும் பணியை வேலூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் தினேஷ்சரவணன் தலைமையிலான தன்னாா்வலா்கள் மேற்கொண்டனா்.

அதன்படி, பள்ளி வகுப்பறை சுவா் முழுவதும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பதுடன், தரைக் கம்பளம், டிஜிட்டல் ஒலி- ஒளி அமைப்புடன் எல்இடி புரொஜக்டா், 5 ஸ்பீக்கா்கள், ஹோம் தியேட்டா் வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், மாணவா்களுக்கு உலகளவில் அறிவியல், விஞ்ஞானம், சமூகவியல், சுற்றுச்சூழல் தொடா்பான கல்வியை சிறப்பாக கற்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தினேஷ்சரவணன் மேலும் கூறியது: ஏற்கெனவே அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடா் ஆரம்பப் பள்ளி, பெருமுகை அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளி ஆகியவற்றிலும் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. மூன்றாவதாக கருகம்பத்தூா் அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. தலா ரூ.1 லட்சம் செலவில் இந்த ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.

பெருமுகைஅரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 லட்சம் செலவில் ஸ்மாா்ட் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டதுடன், வள்ளலாா் நடுநிலைப் பள்ளியில் தண்ணீா் வசதி செய்யப்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.