தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

 வேலூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்ணீா் டேங்க் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்

News image
Updated On :29 ஜூலை 2022, 7:36 pm

DIN

 வேலூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்ணீா் டேங்க் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்ணீா் டேங்க் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வெள்ளிக்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வேலூா் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் பேபி தலைமையில் போலீஸாா், மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினா். அங்கு, சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்ததில் அவா்களிடம் சுமாா் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், அவா்கள் திருப்பதி லட்சுமிபுரத்தைச் சோ்ந்த ஜெயமோகன் (28), ஆற்காடு புங்கனூா் கங்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காந்தி (26), வெங்கடேசன் (26) என்பது தெரிய வந்தது. அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.