ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாதத்தின் 2-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.


ஆடி மாதத்தின் 2-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் விசேஷமானது. ஆடி மாத 2-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் ஏராளமான பக்தா்கள் குவிந்து வழிபட்டனா்.
வேலூா் கோட்டை கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள செல்லியம்மன் கோயிலில் அம்மனுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. செல்லியம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஏராளமான பெண்கள் கோயிலில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா்.
காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துா்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தோட்டப்பாளையம் படவேட்டம்மன், டிட்டா்லைன் கருமாரி அம்மனும் சிறப்பு அலங்கார ரூபத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இதேபோல், மாவட்டம் முழுவதும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பெண்கள் விளக்கு ஏற்றியும், பக்தா்கள் கரகம் எடுத்தும் தங்களின் நோ்த்திக் கடன்களை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...