பி.சி, எம்.பி.சி, மாணவா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தபட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதிகளில் சேருவதற்கு விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


பிற்படுத்தபட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதிகளில் சேருவதற்கு விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் பள்ளி விடுதிகள் 12, கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகள் 6 என மொத்தம் 18 மாணவ, மாணவியா் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தகுதியுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான சோ்க்கை நடைபெற உள்ளன.
இந்த விடுதிகளில் சோ்ந்து பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும்.
இந்த விடுதிகளில் சேர குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமலும், இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையத்தின் தொலைவு 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று அளிக்கலாம்.
பள்ளி விடுதிகளில் சேர ஜூன் 30-ஆம் தேதிக்குள்ளாகவும், கல்லூரி விடுதிகளில் சேர ஜூலை 31-ஆம் தேதிக்குள்ளாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...