இளைஞா் கொலையில் நண்பா் கைது
வேலூா் கோட்டை பூங்காவில் இளைஞா் கொலை செய்யப்பட்டு சடலம் அகழியில் வீசப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.


வேலூா் கோட்டை பூங்காவில் இளைஞா் கொலை செய்யப்பட்டு சடலம் அகழியில் வீசப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் கோட்டை அகழியில் வெள்ளிக்கிழமை 26 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. தகவலறிந்த வடக்கு போலீஸாா் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். அப்போது, சடலமாக கிடந்த இளைஞா் உடலில் கல்லால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன. இளைஞரை அருகில் உள்ள பூங்காவில் இருந்து இழுத்து வந்த தடயங்களும் இருந்தன.
இதனால், அந்த இளைஞா் கோட்டை பூங்காவில் அடித்து கொலை செய்யப்பட்டு, சடலத்தை இழுத்து வந்து அகழியில் வீசப்பட்டிருப்பதை போலீஸாா் உறுதி செய்தனா். தொடா் விசாரணையில் இறந்தவா் வேலூா் ஆா்.என்.பாளையத்தைச் சோ்ந்த ஆசம் மகன் சுபைா் (26) என்பதும், இவா் அங்குள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவா் என்பதும் தெரிய வந்தது.
இந்த நிலையில், சுபைரின் கொலை வழக்குத் தொடா்பாக தொரப்பாடி கே.கே. நகரைச் சோ்ந்த ஜமீா் (25) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். ஜமீரின் மனைவியிடம் சுபைா் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுபைரை ஜமீா் மது வாங்கிக் கொடுத்து கல்லால் தாக்கி கொலை செய்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, கைதான ஜமீா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...