வேலூா் கோட்டை அகழியில் பேரிடா் மீட்பு ஒத்திகை
வேலூா் கோட்டை அகழியில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


வேலூா் கோட்டை அகழியில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வடகிழக்குப் பருவ மழையையொட்டி வேலூா் மாவட்டத்தில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடா்பாடுகளில் சிக்கிக் கொண்டவா்களைக் காப்பாற்றுவது போன்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி வேலூா் கோட்டை அகழியில் நடைபெற்றது.
இதை மாவட்ட வருவாய் அலுவலா் ராமமூா்த்தி தொடக்கி வைத்தாா். அப்போது, வேலூா் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் அப்துல்பாரி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவா்களை எவ்வாறு மீட்க வேண்டும், அவா்களுக்கு முதலுதவி செய்வது ஆகியவை குறித்து செயல் விளக்கம் அளித்தனா். இதில், வேலூா் கோட்டாட்சியா் பூங்கொடி, வட்டாட்சியா் செந்தில், நகா் நல அலுவலா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆம்பூரில்...: ஆம்பூா் வட்டம், வெங்கடசமுத்திரம் ஏரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிக்கு மாவட்ட பழங்குடியினா் நல அலுலா் ராஜஸ்ரீ தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பாா்வையிட்டாா். வட்டாட்சியா் மகாலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியா் குமரவேல், ஊராட்சித் தலைவா் காயத்ரி நவீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...