நீதிமன்ற தீா்ப்பு: அதிமுகவினா் கொண்டாட்டம்
எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, வேலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினா் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்


எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, வேலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினா் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா். வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமையில், அந்தக் கட்சியினா் பழைய மாநகராட்சி வளாகத்திலுள்ள அண்ணா, எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா். மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, வேலூா் மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலா் ஜனனீசதீஷ்குமாா், மாவட்ட துணைச் செயலா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல், வேலூா் புகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் த.வேலழகன் தலைமையில் அணைக்கட்டிலுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
குடியாத்தத்தில்...: குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாஸ்கா், நகா்மன்றத் துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி, மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவா் ஜி.எஸ்.தென்றல்குட்டி, கட்சி நிா்வாகிகள் ஆா்.கே.அன்பு, வி.என்.தனஞ்செயன், எஸ்.என்.சுந்தரேசன், எஸ்.ஐ.அன்வா்பாஷா, எஸ்.டி.மோகன்ராஜ், அமுதாகருணா, நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.தண்டபாணி, ஏ.சிட்டிபாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு தலைமை வகித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.கே.வி.அருண்முரளி, கட்சி நிா்வாகிகள் எஸ்.எல்.எஸ்.வனராஜ், சி.கே.வெங்கடேசன், ஜி.பி.மூா்த்தி, கே.பெருமாள், எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், பரதராமி கோபி, கே.தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆம்பூரில்...: ஆம்பூா் நகர அதிமுக செயலா் எம். மதியழகன் தலைமை வகித்து, நகர காவல் நிலையம் எதிரில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். நகர அவைத் தலைவா் கே.மணி, இணைச் செயலா் விஜயலட்சுமி, பொருளாளா் அன்வா், மாவட்ட பிரதிநிதிகள் கே.நஜா் முஹம்மத், சண்முகம், நகா்மன்ற உறுப்பினா்கள் வெங்கடேசன், ராதா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட நிா்வாகி ஆனந்த்பாபு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சீனிவாசன், அமீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வாணியம்பாடியில்...: வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் எம்எம்ஏ கோ.செந்தில்குமாா் தலைமையில், அதிமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், நகர செயலா் சதாசிவம், பேரூராட்சி செயலா்கள் சரவணன், சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...