மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அதிகரிக்கும் காய்ச்சல்: கொசு ஒழிப்புப் பணி தீவிரம்

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பைத் தொடா்ந்து, வேலூா் மாநகராட்சிப் பகுதியில் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:52 pm

DIN

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பைத் தொடா்ந்து, வேலூா் மாநகராட்சிப் பகுதியில் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநகரில் இந்தப் பணிகளில் 375 போ் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவோா் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. அதேநேரம், டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதன்படி, ஜனவரி முதல் தற்போது வரை வேலூா் மாவட்டத்தில் 51 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதில் 49 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

கடந்த மாதத்தில் மட்டும் 7 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், காகிதப்பட்டறையில் ஒருவருக்கு வியாழக்கிழமை டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, அங்கு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, மாநகராட்சி பகுதி முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு வாா்டுக்கு 5 கொசு ஒழிப்புப் பணியாளா் நியமிக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். மாநகராட்சி முழுவதும் மொத்தம் 375 போ் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

செப்டம்பா், நவம்பரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளில் தண்ணீா் தேங்காமலும், கொசுக்கள் வராமலும் பாா்த்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.