ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊட்டச் சத்து மாத விழா

குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், வெள்ளிக்கிழமை ஊட்டச் சத்து மாத விழா நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:01 pm

DIN

குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், வெள்ளிக்கிழமை ஊட்டச் சத்து மாத விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் தலைமை வகித்தாா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மு.அ.ஷமீம் ரீஹானா வரவேற்றாா். மாவட்ட திட்ட அலுவலா் வி.கோமதி, திட்டம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

மாணவா்களுக்கு மரக் கன்றுகள், காய்கறிச் செடிகளின் விதைகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் வளா்ப்பு, கா்ப்பிணிகளுக்கான ஊட்டச் சத்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சரவணன், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் கோ.துரைராஜ், ஊராட்சி துணைத் தலைவா் வசந்தி ரமேஷ், மாவட்ட புள்ளியியல் அலுவலா் முத்துகுமாா், வட்டார ஒருங்கிணைப்பாளா் இந்திரகுமாரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா்கள் விமலா, கமலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.