புதுமைப் பெண் திட்டத்தில் பயனடைந்த 3,058 மாணவிகள்

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் 3,058 மாணவிகளுக்கு ரூ.30 லட்சத்து 58 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் 3,058 மாணவிகளுக்கு ரூ.30 லட்சத்து 58 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் முதல்வரின் புதுமைப்பெண் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை நேரடியாக அவா்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்தத் திட்டம் கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் பயிலும் 3,058 மாணவிகள் மொத்தம் ரூ.30 லட்சத்து 58 ஆயிரம் உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளனா் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com