பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கன்னத்தில் அறைந்தது போல... தோல்விக்குப் பிறகு மார்க்ரம் பேட்டி!

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் தோல்வியுற்ற பிறகு, தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பேசியிருப்பதாவது...

South Africa's captain Aiden Markram leaves the ground after losing his wicket during the first T20 World Cup cricket semifinal match between New Zealand and South Africa in Kolkata, India, Wednesday, March 4, 2026. (AP Photo/Anupam Nath)

ஆட்டமிழந்து வெளியேறிய எய்டன் மார்க்ரம். - படம்: ஏபி

Published On :

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் தோல்வியுற்ற பிறகு, தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம், “எங்களது கன்னத்தில் அறையாவிட்டாலும், அப்படித்தான் உணர்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 12.5 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது.

இந்த உலகக் கோப்பையில் தோல்வியே சந்திக்காத அணியாக இருந்த தென்னாப்பிரிக்க அணி முதல்முறையாக அரையிறுதியில் தோல்வியுற்று அதிர்ச்சி அளித்தது.

இந்தத் தோல்விக்குப் பிறகு, அந்த அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறியிருப்பதாவது:

மிகவும் வருத்தமாக இருக்கிறது. இது மிகப்பெரிய தோல்வி. கன்னத்தில் அறையவிட்டாலும், அப்படித்தான் உணர்கிறேன். இருப்பினும் நாங்கள் மீண்டும் சிறந்த அணியாக மீண்டு வருவோம்.

கொல்கத்தா பிட்ச் நன்றாக இருக்குமென நினைத்தோம். பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. அதனால், பிட்ச்சிற்கு ஏற்ப விரைவாக தகவமைத்து, சற்று பழைய பாணியில் விளையாடி இருந்தால் 190 அடித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால், போட்டியில் இருந்திருக்கலாம்.

போட்டியில் வருத்தமாக இருந்தாலும் எங்களது வீரர்கள் நினைத்து பெருமையாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். இந்த ஒருநாள் சரியாக அமையவில்லை.

நியூசிலாந்து அணியினர் சிறப்பாக பந்துவீசினார்கள். பந்து பேட்டிற்கு வரவில்லை. விக்கெட் விழுந்ததும் போட்டியில் அழுத்தம் அதிகரித்தது. அதனால், பந்துவீச்சு அணிக்கு பாராட்டுகளே தெரிவிக்க வேண்டும்.

போட்டியின் பாதியில் எங்களுக்கு மூச்சு விடக்கூட முடியாத நிலை இருந்தது. 170 ரன்கள் எடுத்ததே பெரிய விஷயம்தான். நியூசிலாந்து அணியினர் பவர்பிளேவில் அதிரடியாக விளையாடினார்கள்.

அனைத்து பக்கமும் எல்லைக் கோட்டைப் பாதுகாக்க முடியாது. நியூசி. வீரர்கள் சிறப்பாக விளையாடியதால், அதற்குப் பிறகு போட்டிக்குள் வர முடியவில்லை. ஃபின் ஆலன் ஆட்டத்துக்கு மிகப்பெரிய பாராட்டுகள். எங்களுக்கு மோசமான நாளாக அமைந்துவிட்டது.

போட்டியை மீண்டும் ஆராய்ந்து, எந்தெந்த இடத்தில் முன்னேற்றம் தேவை என்பதை கணக்கிட வேண்டும். அணியாக தவறுகளைத் திருத்தி, வலுவாக முன்னேற வேண்டும் என்றார்.

Summary

After losing in the semi-finals of the T20 World Cup, South African captain Aiden Markram said, "Even if it's not a slap in the face, we still feel that way."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.