காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மூச்சுத்திணறல் அல்ல, கொடூரமான தாக்குதல்..! தோல்வி குறித்து தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்!

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பேசியிருப்பதாவது...

South Africa's players wait for the third umpire's decision for the wicket of New Zealand's Tim Seifert during the first T20 World Cup cricket semifinal match between New Zealand and South Africa in Kolkata, India, Wednesday, March 4, 2026. (AP Photo/Bikas Das)

தென்னாப்பிரிக்க அணியினர். (உள்படம் - பிட்சை ஆராயும் பயிற்சியாளர், வீரர்கள்) - படங்கள்: ஏபி

Published On :

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், “மிகவும் கொடூரமான தாக்குதல்” என வர்ணித்துள்ளார்.

நியூசிலாந்து அணி கொல்கத்தாவில் நடந்த அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 12.5 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்தின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து மிரட்டினார்.

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வென்ற பிறகு, ”இந்தியர்கள் மண்டியிட வேண்டும்” எனப் பேசியது இந்திய ரசிகர்களிடம் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், அரையிறுதியில் மோசமாக தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி குறித்து அதன் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் பேசியதாவது:

இந்தமுறை நடந்தது சோக் -Choke (மூச்சுத்திணறல்) அல்ல; மிகவும் அதிவிரைவாக முடிந்துவிட்டதாக நினைக்கிறேன்.

மூச்சுத்திணறல் என்றுக்கூற, இந்தப் போட்டியில் சிறிதாவது சுவாசம் இருந்திருக்க வேண்டும். நாங்கள் அந்த அளவுக்கு மூச்சுவிடவும் வாய்ப்பே அமையவில்லை. தென்னாப்பிரிக்காவில் நாங்கள் இதை ‘கொடூரமான வன்முறை’ என்போம்.

இன்றிரவு எங்களுக்கு சரியான ‘ஸ்நாட்க்ளாப்’ கிடைத்தது. இது ஒரு தென்னாப்பிரிக்காவின் வார்த்தை. இதற்கு, நமக்கு வரும் மறைமுகமான தாக்குதல் தெரியவில்லை என்று அர்த்தம். எங்களுக்கு அப்படித்தான் இருந்தது.

மார்கோ யான்சென் மற்றும் ஸ்டப்ஸ் நன்றாக போட்டியை மீட்டெடுத்தார்கள். இருந்தும் நியூசிலாந்து அணியினர் சிறப்பாக விளையாடினார்கள்.

நியூசிலாந்து அணியினர் பிட்சை சிறப்பாக உபயோகித்தார்கள். குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்களை நன்றாக பயன்படுத்தினார்கள். அதனால், அவர்களுக்குதான் முழுமையான மதிப்பெண் தரவேண்டும்.

இந்தப் போட்டியில் எங்களுக்கு நிறைய விஷயங்கள் சரியாக நடந்திருக்க வேண்டும். நாங்கள் இப்போதுதான் அதைப் பற்றி பேசினோம். எல்லாம் சரியாக சென்றது. ஆனால், இன்றிரவு மோசமானதாக அமைந்துவிட்டது என்றார்.

Summary

It wasn't a choke but a walloping: SA coach Conrad after semis defeat to NZ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.