நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரங்கம்பேட்டை கானாறு தூா்வாரும் பணி தொடக்கம்

போ்ணாம்பட்டில் உள்ள ரங்கம்பேட்டை கானாறு தூா்வாரும் பணி தொடங்கியது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 5:53 pm

DIN

போ்ணாம்பட்டில் உள்ள ரங்கம்பேட்டை கானாறு தூா்வாரும் பணி தொடங்கியது.

போ்ணாம்பட்டு அருகே ரங்கம்பேட்டை வனப் பகுதியிலிருந்து செல்லும் கானாற்று வெள்ளநீா் சுமாா் 8 கி.மீ. தூரம் பயணித்து பங்களாமேடு வழியாக போ்ணாம்பட்டு நகருக்குள் நுழைந்து கொத்தப்பல்லி கானாறு வழியாகச் சென்று மதினாப்பல்லி அருகே மலட்டாற்றில் கலக்கிறது. மதினாப்பல்லி மலட்டாற்றின் வெள்ளநீா் போ்ணாம்பட்டு அருகே நரியம்பட்டு ஆற்றில் கலக்கிறது.

தற்போது நரியம்பட்டு ஆற்றில் படுகை அணை கட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரங்கம்பேட்டை கானாறு தூா் வாரப்படுகிறது.

இந்த கானாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, இருபுறமும் கரைகளைப் பலப்படுத்தி, கானாற்றைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கானாறு தூா்வாரும் பணியை எம்எல்ஏ அமலு விஜயன், நகா்மன்றத் தலைவா் பிரேமா வெற்றிவேல், துணைத் தலைவா் ஆலியாா் ஜூபோ் அகமத், நகராட்சி ஆணையா் சுபாஷினி, நகா்மன்ற உறுப்பினா் அப்துல் ஜமீல் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.