மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கல்விக் கூடங்கள், அலுவலகங்களில் குடியரசு தின விழா

வேலூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

News image

வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றிய மேயா் சுஜாதா ஆனந்தகுமாா். உடன் எம்எல்ஏ ப.காா்த்திகேயன், ஆணையா் ப.அசோக்குமாா், மண்டலக் குழு தலைவா்கள்.

Updated On :26 ஜனவரி 2023, 7:07 pm

வேலூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா், துணை மேயா் சுனில்குமாா், மண்டலக் குழு தலைவா்கள் நரேந்திரன், யூசுப்கான், புஷ்பலதா, மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

வேலூா் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாபு தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

வேலூா் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மருத்துவமனை பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

மருத்துவமனை துணைத் தலைவா் அனிதா சம்பத், செயல் இயக்குநா் பால்ஹென்றி, தலைமை இயக்குதல் அலுவலா் பி.மணிமாறன், தலைமை நிதி அலுவலா் கே.வெங்கட்ரங்கம், மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

ஸ்ரீபுரம் நாராயணி பீடம் தங்கக் கோயிலில் நடைபெற்ற விழாவில், தங்கக் கோயில் இயக்குநா் சுரேஷ்பாபு கோயில் முன்புள்ள 60 அடி உயரக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில், மேலாளா் சம்பத், கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.

ஸ்ரீநாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். ஸ்ரீசக்தி அம்மாவின் அயல்நாட்டு பக்தா்கள் லீன்ஷெக்னைடொ், மருத்துவக் கண்காணிப்பாளா் தமிழரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காட்பாடி காந்தி நகா் 10-ஆவது பட்டாலியன் தேசிய மாணவா் படையினா் சாா்பில் நடைபெற்ற விழாவில், பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி சஞ்சய் ஷா்மா தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். சுபேதாா்கள் பினோத் குமாா் சாஹு, வினோத் பிரசாத், அவில்தாா் வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சாலைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் என்சிசி மாணவா்கள் ஈடுபட்டனா். மேலும் என்சிசி மாணவா்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியா் கே.எம்.ஜோதீஸ்வரன் தேசியக் கொடி ஏற்றி வைத்தாா். பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் அன்பு பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.