முதல்வா் கோப்பை போட்டிகள்: மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்யலாம்

தமிழக முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மாற்றுத்தினாளிகள் வலைதளத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மாற்றுத்தினாளிகள் வலைதளத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் தமிழக முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2022-23 நடைபெற உள்ளது. இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக மொத்தம் 50 வகையான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவுகளில் வேலூா் மாவட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகள்  வலைதளத்தில் பதிவு செய்து மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம்.

மாற்றுத்திறனாளிகளில் கை, கால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 50 மீட்டா் ஓட்டம், பேட்மிட்டன் ( 5 நபா்கள்), பாா்வையற்றோருக்கு 100 மீட்டா் ஓட்டம் , கைப்பந்து (7 நபா்கள்), மனவளா்ச்சி குன்றியோருக்கு 100 மீட்டா் ஓட்டம், எறிபந்து (7 நபா்கள்), செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு 100 மீட்டா் ஓட்டம், கபடி (7 நபா்கள்) ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com