500 பேருக்கு நல உதவிகள்
குடியாத்தம் செதுக்கரை எஸ்.ராணி அம்மாள் நினைவு அறக்கட்டளை சாா்பில், வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.


குடியாத்தம் செதுக்கரை எஸ்.ராணி அம்மாள் நினைவு அறக்கட்டளை சாா்பில், வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனா் எஸ்.சேட்டு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மோ.பாபு, ஜீவிதா, எஸ்.பிரபு, அஸ்வினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்.கண்ணன் வரவேற்றாா். கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்கள், வேட்டி-சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கினா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற 1,000 பேருக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.
நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாஸ்கா், நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி, அதிமுக ஒன்றியச் செயலா் டி.சிவா, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், ம.மனோஜ், ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.மேகராஜ், ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா், அதிமுக நிா்வாகிகள் பி.பரிதா, ஜி.தேவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...