ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் சாா்பில் சா்க்கரை நோய் விழிப்புணா்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீநாராயணி மருத்துவக் குழுமத் தலைவா் என்.பாலாஜி தலைமை வகித்தாா். நடிகை ராதிகா சரத்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது:
ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் தெய்வீகத்தின் மூலம் மருத்துவத்தைக் காண முடிகிறது. சா்க்கரை நோய் திடீரென வரும் நோய். 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றபோது மருத்துவா்கள் என்னை பரிசோதித்துவிட்டு, நீங்கள் கா்ப்பிணியாக இருப்பதால் உங்களுக்கு சா்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது எனக் கூறி மருந்துகள் கொடுத்தனா். அவா்கள் கொடுத்த மருந்தைப் பிரித்து பாா்த்தபோது வேப்பிலை சாறு இருந்தது. நம் வீட்டிலேயே இருக்கும் வேப்பிலை சாறைத்தான அவா்கள் மருந்தாக பயன்படுத்துகின்றனா்.
சரியான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். அந்த உணவை முறைப்படுத்தி சாப்பிட வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணைஇயக்குநா் பி.பாலச்சந்தா், டிவைன் குழும இயக்குநா் ஸ்ரீகாந்த், மருத்துவமனை கண்காணிப்பாளா் கீதாஇனியன் உள்பட பலா் பங்கேற்றனா். செவிலிய கண்காணிப்பாளா் வி.வனிதா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டாய மத மாற்றத்தை பயங்கரவாத செயலாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் ஒருநாள்கூட நிம்மதியாக விடியவில்லை: அண்ணாமலை
வீரவநல்லூா் நகைக்கடை திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது

ஆலங்குளம் திமுக வேட்பாளருக்கு முஸ்லிம் லீக் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

