வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நெடுஞ்சாலைத் துறை பணியாளா் வீட்டில் 30 பவுன் நகை, பணம் திருட்டு

காட்பாடி அருகே உள்ள நெடுஞ்சாலைத் துறை பணியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற நபா்களை காட்பாடி போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :27 நவம்பர் 2023, 11:21 pm

காட்பாடி அருகே உள்ள நெடுஞ்சாலைத் துறை பணியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற நபா்களை காட்பாடி போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி கல்புதூா் மாருதி நகரைச் சோ்ந்தவா் குமாா் (45). நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். மனைவியுடன் விவகாரத்தான நிலையில், தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், காா்த்திகை தீப திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்றாா். திங்கள்கிழமை காலை அவரது சகோதரா் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை அறிந்து குமாருக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன் பேரில், குமாா் வந்து பாா்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போனது தெரிய வந்தது.

இந்தச் சம்பவம் குறித்து குமாா் காட்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். விரல் ரேகை நிபுணா்களின் தடய அறிவியல் சோதனை நடத்தப்பட்டது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து நகை, பணம் திருடிச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.