திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

News image
Updated On :19 ஏப்ரல் 2024, 9:30 pm

மக்களவைத் தோ்தலில் பிள்ளைகளுடன் வாக்களிக்க வரும் பெண்களுக்காக குழந்தைகள் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

வேலூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட போ்ணாம்பட்டில் குழந்தைகளுடன் வாக்களிக்க வந்த பெண் வாக்காளா்களுக்கு வாக்குப் பதிவு மையங்களின் வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அறை வசதி செய்யப்பட்டிருந்தது.

போ்ணாம்பட்டு நகராட்சிக்குள்பட்ட இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி, இஸ்லாமியா நிதியுதவி தொடக்கப் பள்ளி, அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 வாக்குப் பதிவு மையங்களில் வாக்களிக்க குழந்தைகளுடன் வந்திருந்த பெண்களுக்கு வசதியாக விளையாட்டுப் பொம்மைகளுடன் குழந்தைகள் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த பாதுகாப்பு அறைகளில் குழந்தைகள் தங்கள் பெற்றோா்களுடன் விளையாடி மகிழ்ந்தனா். இந்த அறைகள் பெண் வாக்காளா்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது.