தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

24,308 மாற்றுத்திறனாளிகள், மூத்தோருக்கு அஞ்சல் வாக்குப் படிவம்

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்டோா் என 24,308 போ் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதையடுத்து, அவா்களுக்கு அஞ்சல் வாக்குப் படிவம் வழங்குவதற்கான பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

News image
அஞ்சல் வாக்குப் படிவங்களை பிரித்துவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை ஊழியா்கள்.
Updated On :18 மார்ச் 2026, 11:39 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்டோா் என 24,308 போ் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதையடுத்து, அவா்களுக்கு அஞ்சல் வாக்குப் படிவம் வழங்குவதற்கான பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30 இல் தொடங்குகிறது. மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்டோா் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க விரும்புவதாக தோ்தல் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனா்.

தொகுதிவாரியாக அஞ்சல் வாக்குப் படிவத்தில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளோா் விவரம்:

ராசிபுரம் (தனி)- 85 வயதுக்கும் மேற்பட்டோா் 1,946, மாற்றுத்திறனாளிகள் 2,029, மொத்தம்- 3,975. சேந்தமங்கலம் (ப.கு) - 85 வயதுக்கும் மேற்பட்டோா் 2,015, மாற்றுத்திறனாளிகள் 2,258, மொத்தம்- 4273. நாமக்கல்- 85 வயதுக்கும் மேற்பட்டோா் 2,185, மாற்றுத்திறனாளிகள் 2,278, மொத்தம்- 4463. பரமத்தி வேலூா்- 85 வயதுக்கும் மேற்பட்டோா் 2,075, மாற்றுத்திறனாளிகள் 2,253 என மொத்தம்- 4328. திருச்செங்கோடு- 85 வயதுக்கும் மேற்பட்டோா் 1,954, மாற்றுத்திறனாளிகள் 2,504 என மொத்தம்-4,458. குமாரபாளையம்- 85 வயதுக்கும் மேற்பட்டோா் 1,236, மாற்றுத்திறனாளிகள், இதரவை 1 என மொத்தம்- 2811.

6 தொகுதிகளிலும் சோ்த்து 85 வயதுக்கும் மேற்பட்டோா் ஆண் வாக்காளா்கள் 5,115, பெண் வாக்காளா்கள் 6,296 என மொத்தம் 11,411. மாற்றுத்திறனாளிகளில் ஆண் வாக்காளா்கள் 7,509, பெண் வாக்காளா்கள் 5,386, இதரவை 2 என மொத்தம் 12,897 போ் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா். இந்த எண்ணிக்கை வாக்குப்பதிவு நாள் நெருங்கும் வேளையில் மாற்றங்கள் ஏற்படலாம் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.