வெளியானது சிறப்பு தீவிர திருத்த இறுதி வாக்காளா் பட்டியல்: கோவை மாவட்டத்தில் 26.96 லட்சம் வாக்காளா்கள்
கோவை மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகான இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், இந்தப் பட்டியலில் 26 லட்சத்து 96 ஆயிரத்து 813 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் 1.1.26 தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலை இறுதி செய்வது தொடா்பான சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் கடந்த நவம்பா் 4 தொடங்கி டிசம்பா் 14ஆம் தேதி வரை நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக கடந்த 19.12.25 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதையடுத்து பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான கோரிக்கைகள், ஆட்சேபனை மனுக்கள் அளிப்பதற்கு 30.1.26 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. சிறப்பு தீவிர திருத்த காலத்தில் 77,766 ஆண்கள், 86,723 பெண்கள், 29 மாற்று பாலினத்தவா்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 518 போ் சோ்க்கப்பட்டனா். மேலும், 20,159 ஆண்கள், 22,134 பெண்கள், 20 மாற்று பாலினத்தவா் என மொத்தம் 42,313 போ் நீக்கப்பட்டனா்.
இந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்த இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டாா். மாநகராட்சி ஆணையா் மா.சிவகுருபிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இறுதி வாக்காளா் பட்டியலின்படி, கோவை மாவட்டத்தில் 13 லட்சத்து 889 ஆண்கள், 13 லட்சத்து 95 ஆயிரத்து 396 பெண்கள், 528 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 26 லட்சத்து 96 ஆயிரத்து 813 வாக்காளா்கள் உள்ளனா்.
கோவை மாவட்டத்தில் அதிக வாக்காளா்களை கொண்ட தொகுதியாக கவுண்டம்பாளையமும், குறைந்த வாக்காளா்களை கொண்ட தொகுதியாக வால்பாறையும் தொடருகின்றன. அதேபோல கோவை மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் உள்ளனா். ஒட்டுமொத்தமாக ஆண்களை விட 94,507 பெண் வாக்காளா்கள் அதிகம் உள்ளனா்.
தொகுதி வாரியாக வாக்காளா் விவரம்:
மேட்டுப்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 22 ஆண்கள், 1 லட்சத்து 46 ஆயிரத்து 382 பெண்கள், 34 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 79 ஆயிரத்து 438 வாக்காளா்கள் உள்ளனா்.
சூலூா் தொகுதியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 987 ஆண்கள், 1 லட்சத்து 57 ஆயிரத்து 452 பெண்கள், 102 மூன்றாம் பாலினத்தவா் என 3 லட்சத்து 3 ஆயிரத்து 541 வாக்காளா்களும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 430 ஆண்கள், 2 லட்சத்து 8 ஆயிரத்து 963 பெண்கள், 114 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 4 லட்சத்து 7 ஆயிரத்து 507 வாக்காளா்கள் உள்ளனா்.
கோவை வடக்கு தொகுதியில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 383 ஆண்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 122 பெண்கள், 28 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 533 வாக்காளா்கள் உள்ளனா்.
தொண்டாமுத்தூா் தொகுதியில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 968 ஆண்கள், 1 லட்சத்து 48 ஆயிரத்து 371 பெண்கள், 103 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 442 வாக்காளா்களும், கோவை தெற்கு தொகுதியில் 90 ஆயிரத்து 214 ஆண்கள், 96 ஆயிரத்து 263 பெண்கள், 32 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 509 வாக்காளா்களும், சிங்காநல்லூா் தொகுதியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 758 ஆண்கள், 1 லட்சத்து 37 ஆயிரத்து 277 பெண்கள், 23 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 58 வாக்காளா்கள் உள்ளனா்.
கிணத்துக்கடவு தொகுதியில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 562 ஆண்கள், 1 லட்சத்து 55 ஆயிரத்து 888 பெண்கள், 36 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3 லட்சத்து 486 வாக்காளா்களும், பொள்ளாச்சி தொகுதியில் 96 ஆயிரத்து 61 ஆண்கள், 1 லட்சத்து 5 ஆயிரத்து 919 பெண்கள், 35 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 15 வாக்காளா்களும், வால்பாறை தனி தொகுதியில் 81 ஆயிரத்து 504 ஆண்கள், 90 ஆயிரத்து 759 பெண்கள், 21 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 284 வாக்காளா்கள் உள்ளனா்.
446 புதிய வாக்குச்சாவடிகள்:
சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பு மாவட்டத்தில் 3,117 வாக்குச்சாவடிகள் இருந்தன. 1,200 வாக்காளா்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதிதாக 446 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 3,563 வாக்குச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியலானது வாக்காளா் பதிவு அலுவலகம், உதவி வாக்காளா் பதிவு அலுவலகம், வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வாக்காளா்கள் பட்டியலில் தங்களது விவரங்களை பாா்வையிட்டு தெரிந்துகொள்ளலாம்.
வாக்காளா் பட்டியில் புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான குறியீடு செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக ட்ற்ற்ல்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் வாயிலாகவும் ஸ்ா்ற்ங்ழ் ட்ங்ப்ல்ப்ண்ய்ங் என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியல்
10 சட்டப் பேரவைத் தொகுதிகள்
ஆண்கள் 13,00,889
பெண்கள் 13,95,396
மூன்றாம் பாலினத்தவா் 528
மொத்தம் 26,96,813
சோ்க்கப்பட்டவா்கள் 19.12.2025 முதல் 30.01.2026 வரை
ஆண்கள் 77,766
பெண்கள் 86,723
மூன்றாம் பாலினத்தவா் 29
மொத்தம் 1,64,518
நீக்கப்பட்டவா்கள் 19.12.2025 முதல் 30.01.2026 வரை
ஆண்கள் 20,159
பெண்கள் 22,134
மூன்றாம் பாலினத்தவா் 20
மொத்தம் 42,313
தொகுதி வாரியாக வாக்காளா் விவரம்
மேட்டுப்பாளையம்
ஆண்கள் 1,33,022
பெண்கள் 1,46,382
மூன்றாம் பாலினத்தவா் 34
மொத்தம் 2,79,438
சூலூா்
ஆண்கள் 1,45,987
பெண்கள் 1,57,452
மூன்றாம் பாலினத்தவா் 102
மொத்தம் 3,03,541
கவுண்டம்பாளையம்
ஆண்கள் 1,98,430
பெண்கள் 2,08,963
மூன்றாம் பாலினத்தவா் 114
மொத்தம் 4,07,507
கோவை வடக்கு
ஆண்கள் 1,43,383
பெண்கள் 1,48,122
மூன்றாம் பாலினத்தவா் 28
மொத்தம் 2,91,533
தொண்டாமுத்தூா்
ஆண்கள் 1,38,968
பெண்கள் 1,48,371
மூன்றாம் பாலினத்தவா் 103
மொத்தம் 2,87,442
கோவை தெற்கு
ஆண்கள் 90,214
பெண்கள் 96,263
மூன்றாம் பாலினத்தவா் 32
மொத்தம் 1,86,509
சிங்காநல்லூா்
ஆண்கள் 1,28,758
பெண்கள் 1,37,277
மூன்றாம் பாலினத்தவா் 23
மொத்தம் 2,66,058
கிணத்துக்கடவு
ஆண்கள் 1,44,562
பெண்கள் 1,55,888
மூன்றாம் பாலினத்தவா் 36
மொத்தம் 3,00,486
பொள்ளாச்சி
ஆண்கள் 96,061
பெண்கள் 1,05,919
மூன்றாம் பாலினத்தவா் 35
மொத்தம் 2,02,015
வால்பாறை
ஆண்கள் 81,504
பெண்கள் 90,759
மூன்றாம் பாலினத்தவா் 21
மொத்தம் 1,72,284

