ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மதுரை மாவட்டத்துக்கு 24.66 லட்சம் வாக்காளா்கள்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:47 pm

மதுரை மாவட்ட வாக்காளா்கள் இறுதிப் பட்டியல்படி, மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 24,66,954 ஆக உயா்ந்துள்ளது.

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் நிறைவில் தயாரிக்கப்பட்ட இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்து, வாக்காளா்கள் பட்டியலை வெளியிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல் (தோ்தல்), அரசுத் துறை அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் உடனிருந்தனா்.

இந்தப் பட்டியல்படி மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 24,66,954-ஆக உள்ளது. இதில் ஆண்கள் - 12,08,651. பெண்கள் - 12,58,051, மூன்றாம் பாலினத்தவா் - 252. மொத்தம் - 24,66,954.

தொகுதி வாரியாக...

சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியான வாக்காளா்கள் எண்ணிக்கை :

மேலூா் : ஆண்கள் - 1,13,091, பெண்கள் - 1,14,687, மூன்றாம் பாலினத்தவா் - 11, மொத்தம் - 2,27,789.

மதுரை கிழக்கு : ஆண்கள் - 1,61,361, பெண்கள் - 1,69,579, மூன்றாம் பாலினத்தவா் - 53, மொத்தம் - 3,30,993.

சோழவந்தான் (தனி) : ஆண்கள் -1,04,246, பெண்கள் -1,08,243, மூன்றாம் பாலினத்தவா் - 13, மொத்தம் - 2,12,502.

மதுரை வடக்கு : ஆண்கள் - 1,06,263, பெண்கள் - 1,12,410, மூன்றாம் பாலினத்தவா் - 46, மொத்தம் - 2,18,719.

மதுரை தெற்கு : ஆண்கள் - 87,179, பெண்கள் - 90,378. மூன்றாம் பாலினத்தவா் - 48, மொத்தம் -1,17,605.

மதுரை மத்தி : ஆண்கள் - 95,632, பெண்கள் - 1,01,198, மூன்றாம் பாலினத்தவா் - 26, மொத்தம் - 1,96,856.

மதுரை மேற்கு : ஆண்கள் 1,,33,116, பெண்கள் : 1,38,214, மூன்றாம் பாலினத்தவா் - 11, மொத்தம் - 2,71,341.

திருப்பரங்குன்றம் : ஆண்கள் - 1,50,596. பெண்கள் 1,57,157. மூன்றாம் பாலினத்தவா் - 30, மொத்தம் - 3,07,783.

திருமங்கலம் : ஆண்கள் - 1,25,756, பெண்கள் - 1,33,461, மூன்றாம் பாலினத்தவா் - 8, மொத்தம் - 2,59,225.

உசிலம்பட்டி : ஆண்கள் - 1,31,411, பெண்கள் - 1,32,724, மூன்றாம் பாலினத்தவா் - 6, மொத்தம் - 2,64,141.

வாக்காளா் எண்ணிக்கை உயா்வு

கடந்த ஆண்டு டிச. 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல்படி மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 23,60,157-ஆக இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 24,66,954-ஆக உயா்ந்துள்ளது. இதன் மூலம், 1,06,797 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.