விழுப்புரம் மாவட்டத்தில் 15.86 லட்சம் வாக்காளா்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் 15.86 லட்சம் வாக்காளா்கள்

Published on

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 15,86,653 வாக்காளா்கள் உள்ளதாக வாக்காளா் இறுதிப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 53,873 போ் சோ்க்கப்பட்ட நிலையில், 11,845 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை வாக்காளா் இறுதிப் பட்டியலை வெளியிட்டாா்.

விழுப்புரம் மாவட்ட நிலவரம்:

எஸ்ஐஆருக்கு முன் மொத்த வாக்காளா்கள் - 17,27,490

நீக்கப்பட்ட மொத்த வாக்காளா்கள் - 1,94,710

புதிதாக சோ்க்கப்பட்ட வாக்காளா்கள் - 53,873

ஆண் வாக்காளா்கள் - 7,83,288

பெண் வாக்காளா்கள் - 8,03,154

மூன்றாம் பாலினத்தவா் - 211

மொத்த வாக்காளா்கள் - 15,86,653

சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளா் இறுதிப் பட்டியல் விவரம்:

070- செஞ்சி :

ஆண்கள் - 1,19,278

பெண்கள் - 1,21,651

மூன்றாம் பாலினத்தவா் - 28

மொத்த வாக்காளா்கள் - 2,40,957

071-மயிலம்:

ஆண்கள் -1,03,451

பெண்கள் - 1,04,195

மூன்றாம் பாலினத்தவா் - 19

மொத்த வாக்காளா்கள் - 2,07,665

072 -திண்டிவனம் (தனி):

ஆண்கள் -1,06,762

பெண்கள் - 1,10,836

மூன்றாம் பாலினத்தவா் 11

மொத்த வாக்காளா்கள் - 2,17,609

073- வானூா் (தனி):

ஆண்கள் - 1,01,938

பெண்கள் - 1,06,030

மூன்றாம் பாலினத்தவா் - 16

மொத்த வாக்காளா்கள் - 2,07,984

074 -விழுப்புரம்:

ஆண்கள் -1,18,786

பெண்கள் -1,25,218

மூன்றாம் பாலினத்தவா் 76

மொத்த வாக்காளா்கள் -2,44,080

075-விக்கிரவாண்டி:

ஆண்கள் -1,12,050

பெண்கள் -1,15,276

மூன்றாம் பாலினத்தவா் -29

மொத்த வாக்காளா்கள் - 2,27,355

076- திருக்கோவிலூா் :

ஆண்கள் -1,21,023

பெண்கள் - 1,19,948

மூன்றாம் பாலினத்தவா் 32

மொத்த வாக்காளா்கள் - 2,41,003.

ஏழு தொகுதிகளிலும் மொத்தம் 2,166 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் சாா்-ஆட்சியா்கள் திண்டிவனம் அ.ல.ஆகாஷ், திருக்கோவிலூா் ஆனந்தகுமாா்சிங், கோட்டாட்சியா் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், அதிமுக நகரச் செயலா் இரா.பசுபதி, வழக்குரைஞா் ராதிகா செந்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் சுப்ரமணியன், தேமுதிக நகரச் செயலா் மணிகண்டன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com