சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

சிறுக்காஞ்சி ஊராட்சியில் தனி நபா் ஏற்படுத்தியுள்ள சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, வேலூா் முஸ்லிம் அரசுப் பள்ளி முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வேலூா் சதுப்பேரியை அடுத்துள்ள சிறுக்காஞ்சி ஊராட்சி பகுதியில் சுமாா் 1,200 குடும்பங்கள் வசிக்கின்றனா். இந்த ஊரில் இருந்து வேலூருக்கு வரும் சாலையின் ஒரு பகுதியை தனி நபா் குடும்பத்தினா் ஆக்கிரமித்து கற்கள் போட்டு அடைப்பு ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

இதனால், பொதுமக்கள் சென்று வருவதற்கு வழியின்றி தவித்துள்ளனா். இதையடுத்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது பாதையை மீட்டு தரக் கோரி, சிறுக்காஞ்சியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை மாலை வேலூா் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் வேலூா் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்த வேலூா் வட்டாட்சியா் கோபி, தெற்கு போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

--

படம் உண்டு...

வேலூா் முஸ்லிம் அரசுப் பள்ளி ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com