புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 4:09 pm

குடியாத்தம் தினசரி மாா்க்கெட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

குடியாத்தம் தினசரி மாா்க்கெட் பகுதியில், காங்கிரஸ் அவுஸ் சாலை முகப்பில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை இரவு குப்பைக்கு மா்ம நபா்கள் தீ வைத்துள்ளனா். இதில் தீ மளமளவென அருகில் உள்ள கடைகளுக்கு பரவியது.

இதில் பழக்கடை, பெட்டிக்கடை என 2 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்புப் படையினா், தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா்.